புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் திருமணம் ஆதனை மறுத்து சிங்கப்பூரில் ஒரு பெண்ணையும், மூன்றாவதாக ஒரு சிறுமியையும் திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையை சேர்ந்த சோலை கணேஷ் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது ஏற்கெனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனதை மறைத்து, கடந்த 2010ஆம் ஆண்டு சிங்கபூரை சேர்ந்த  தமிழ் வம்சாவளிப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

அந்தப் பெண் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மூலமாக சிங்கப்பூரில் ஃபிளாட் ஒன்றை வாங்கி அதை தன்னுடைய பெயரில் சோலை கணேஷ் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சோலை கணேஷ் அவ்வப்போது சொந்த ஊர் சென்று வரவே அவர் மீது  அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது . இந்த நிலையில் அண்மையில் சொந்த ஊர் வந்த சோலை கணேஷ், ஏற்கெனவே திருமணமாக விவகாரத்து பெற்றதையும், சிங்கப்பூரில் ஒரு திருமணம் நடைபெற்று இருப்பதையும் மறைத்து 17 வயது மட்டுமே நிரம்பிய சிறுமியை 3வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதைக் அறிந்த சிங்கப்பூர் பெண், தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் இவர் தன்னை ஏமாற்றி 72 லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். வேறு எந்தப் பெண்ணும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கிலேயே புகார் அளித்ததாகவும் சிங்கப்பூர் பெண் வேதனை தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து சோலை கணேஷ் கைது செய்யப்பட்டார். சிறுமியை திருமணம் செய்ததற்காக சோலை கணேஷ் மீதும், அவருடைய பெற்றோர் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.