முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு மண்டபத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அவரை ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மண்டபத்தை, அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10.30 மணியளவில் மதுரை வந்தடைந்தார் பிரதமர் மோடி.  அவரைஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் வரவேற்றனர்.

இன்னும் சற்று நேரத்தில் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ராமெஷ்வரம் வரும் மோடி, பின்னர் அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பேய்க்கரும்பு சென்றடைகிறார்.

11 மணியளவில் நினைவு மண்டபத்தை திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.