modi only directs tamilnadu politics said panneer selvam

மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் 70 வது பிறந்தநாள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் பல ரகசியத்தை அனைவரும் மத்தியிலும்போட்டு உடைத்தார்.

தேனியில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பன்னீர் செல்வம்,"அம்மா என்னிடம் அடிக்கடி கேட்கும் ஒரே கேள்வி, தினகரனிடம் பேசினீங்களா..? அவர் கூட பேச கூடாது என தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

அம்மா உயிருடன் இருக்கும் வரையில்,தினகரனை வீட்டுக்கு கூட வர விட மாட்டார் என்றும் தெரிவித்தார்.

சசிகலா குடும்பத்தை பற்றி பேசும் போது, "எனக்கு சீட் கொடுக்கும் போது சசிகலா குடும்பத்தினர் பயங்கரமான எதிர்ப்பு தெரிவித்தனர்.எனக்கு எதிராக பல சதிகள் தீட்டினர்.

அதிமுகவை காப்பாற்ற முடியாத விரக்தியிலும்,கோவத்திலும் பல வார்த்தைகளை பேசுகின்றனர்.நேற்றைய கூட்டத்தில் கூட,என்னை டீக்கடையில் அமர வைக்கப்படுவர் எனவும் தெரிவித்தனர்.

நான் டீ கடையில் இருந்தாலும்,அவர்களை ஏமாற்றி பிழைக்க வில்லை வில்லை என தெரிவித்தார்.

எனக்கு சசிகலா குடும்பத்தினர் அதிக நெருக்கடி கொடுத்தனர்.வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார் என்றும் கூறினார்.

மோடி வாக்கு

பிரதமர் மோடி அவர்கள் கேட்டுகொண்டதன் பெயரில்தான் முதல்வர் அணியில் இணைந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

ஏற்கனவே தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர் செல்வம்,தற்போது எடப்பாடி அணி உடனான இணைதல் குறித்து இன்று வாய் திறந்ததால்,இன்னொரு யுத்தம் தொடங்குமோ என்ற ஆவல் ஏற்பட்டு உள்ளது.