Asianet News TamilAsianet News Tamil

வாட்ஸ்ஆப் யூனிவர்சிட்டி வேந்தர் மோடி, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

ஊழல் யூனிவர்சிட்டி கட்டி, வேந்தராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால் அதற்குப் பொருத்தமானவர் மோடிதான். அவர் வாட்ஸ்ஆப் யூனிவர்சிட்டியை விட்டுவிட்டு, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Modi must read books instead of following WhatsApp University: MK Stalin sgb
Author
First Published Apr 10, 2024, 9:08 PM IST

ஊழல் யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு வேந்தராக நியமிக்கப் பொருத்தமானவர் மோடிதான் என்றும் பிரதமர் மோடி புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேனி லட்சுமிபுரம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தேனி தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

பொதுக்கூடத்தில் பேசியபோது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

மக்களுக்கு சாதனைகளை செய்யக்கூடியது இந்தியா கூட்டணி. சிறுபான்மையினருக்கு எதிரான, தொழிலாளர் விரோத சட்டங்கள் மறுசீரமைக்கப்படும். விவசாயிகள் பெற்ற கடனும் வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெற்கின் குரல் எதிரொலிக்கிறது. ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், விவசாய பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லை, குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் சி.இ.ஓ வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க...

Modi must read books instead of following WhatsApp University: MK Stalin sgb

 

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா, அமளியான இந்தியாவாக மாறிவிடும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது; தேர்தல் இருக்காது; நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சமூக நீதியை குழி தோண்டி புதைத்து விடும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தேர்தல் காரணமாக உள்நாட்டில் சுற்றுலா வந்துள்ளார்.

திராவிட மாடலால் தமிழ்நாடு வளர்ந்துள்ளது. வளர்ச்சியை மோடி மஸ்தான் வேலையால் தடுக்க முடியாது. வேண்டாம் மோடி என்று தெற்கிலிருந்து ஒலிக்கும் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். தமிழ்நாட்டை வளர்க்கப் போகிறேன் என்று இந்தியில் பேசி மோடி மஸ்தான் வித்தை காட்டுகிறார் பிரதமர் மோடி.

ஊழல் யூனிவர்சிட்டி கட்டி, வேந்தராக ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால் அதற்குப் பொருத்தமானவர் மோடிதான். அவர் வாட்ஸ்ஆப் யூனிவர்சிட்டியை விட்டுவிட்டு, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மோடி சாதனைகளாக எதையும் சொல்ல முடியாமல் உள்ளார்.

சென்னையில் ரோடு ஷோ காட்டிய மோடி மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என்று சொல்கிறார். சென்னையில் மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு அனுமதி தராதது மத்திய அரசுதான். மதுரையின் எய்ம்ஸ் போல மெட்ரோ ரெயில் திட்டம் நிற்கக்கூடாது என மாநில நிதியில் இருந்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பிரதமர் கனவில் தாம் இருப்பதாக சொல்லும் எடப்பாடி பழனிசாமி என்ன கனவில் உள்ளார்? பிரதமர்களை உருவாக்கும் இயக்கமே திராவிட முன்னேற்ற கழகம்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி பேட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios