தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடுகிறார். இதனையொட்டி இன்று காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர்,

சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து பெறுகிறார்.

Scroll to load tweet…

மோடி, தமிழிசை வாழ்த்து

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். 

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அரசியலமைப்பில் பொதிந்துள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்கள் உறுதியான தீர்மானம் மிகவும் ஊக்கமளிக்கிறது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

பினராயி விஜயன், அண்ணாமலை வாழ்த்து

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

தோல்வி பயம் பிரதமரின் முகத்தில் தெரியவில்லை... ஸ்டாலினுக்குதான் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது- வானதி சீனிவாசன்