‘தமிழகத்திற்கு மழை “போயே போச்சு” – வானிலை மையம் தகவல்
தென் தமிழகம மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினம் அருகே 250 கி.மீ.தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கங்கடல் பகுதியில் இருந்த விலகி செல்லும் என தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகி சென்றால் 6ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை இருக்காது என்றும், தென் தமிழகம மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரம், காங்கேயத்தில் தலா 7 செ.மீ.மழைப் பதிவாகியுள்ளது என வானிலை மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கடந்த சில தினங்களாக எச்சரிக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.
இந்நிலையில், தென் தமிழகம மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
