மீனவர்களின் வசதிக்காக மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி தளங்களில் நடமாடும் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நாடு முழுவதும் மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால்,பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மீனவர்களின் நிலை மிக மோசமாக உள்ளது.இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மீனவர்களுக்காக மீன்பிடி துறைமுகங்களிலும், இறக்கு தளங்களிலும் நடமாடும் வங்கிகள் அமைக்கப்பட உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.