mlas fund 936 crores waste
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் தலா 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
அதற்கான திட்ட முன் வரைவை கொடுத்து, அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ க்கள் நிதியை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அதன்படி, கடந்த 2016 – 17 ம் நிதியாண்டுக்காக 468 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அப்படியே முடங்கி கிடக்கிறது. பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் திட்ட முன் வரைவு கொடுக்காததால் கிடப்பில் உள்ளது. திட்ட வரைவு கொடுத்தவர்களுக்கு இன்னும் வேலை நடக்கவில்லை.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டான 2017 – 18 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டிலும், எம்.எல்.ஏ க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக 468 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அப்படியே முடங்கி கிடக்கிறது.
அதனால், அந்த நிதியில் எப்போது வேலைகள் தொடங்கும் என்பது எம்.எல்.ஏ க்களுக்கே தெரியாமல் உள்ளது. இதுவே இப்படி என்றால், மற்ற வேலைகள் எப்படி? என்பதை மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுகவில் அணிகள் பிரிந்தது ஒரு பக்கம். ஆட்சி நிலைக்குமா? நிலைக்காதா? என்ற அச்சம் மறுபக்கம். இதனால், என்ன செய்வதென்றே தெரியாமல் அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் குழப்பத்தின் விளைவே இதற்கு காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
நிலைமை இப்படி இருந்தால், செயல்படாத அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லாமல் இருக்குமா என்ன?
