கரூர்

"கருணாநிதி எதிர்கொண்ட அனைத்துச் சவால்களையும் சமாளிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்று கரூரில் மாநிலக் காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

karur name க்கான பட முடிவு

கரூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் தமிழ் மாநிலக் காங்கிரசு கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன். 

அதில், "தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலினும், பொருளாளராக துரைமுருகனும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு தமிழ் மாநிலக் காங்கிரசு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நன்றாக வளர்ச்சி அடையும். கருணாநிதி எதிர்கொண்ட அனைத்துச் சவால்களையும் சமாளிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பார்" என்று புகழ்ந்து தள்ளினால் ஜி.கே.வாசன்.

g,k,vasan க்கான பட முடிவு

மேலும், "மேட்டூர் அணை நிரம்பி காவிரியில் இருந்து திறக்கப்பட்ட சுமார் 100 டி.எம்.சி. உபரிநீர் கடலுக்குச் சென்று வீணானது. மணல் கொள்ளை தடுக்காததால்தான் முக்கொம்பு, கொள்ளிடம் ஆற்றின் மதகுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. 

எனவே, காவிரி, கொள்ளிடம் உட்பட அனைத்துப் பகுதியிலும் ஆற்று மணல் அள்ளுவதைத் தடைச் செய்யவேண்டும். மணல் கொள்ளையால்தான் திருச்சி காவிரி ஆற்றில் மதகுகள் உடைந்தன என்பதை ஏற்றுக்கொள்ளத் தயங்கினால் தமிழக அரசு மீதுதான் சந்தேகம் வலுத்துக் கொண்டேபோகும். 

g.k.vasan and m.k.stalin க்கான பட முடிவு

மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் அணைகள் மற்றும் பாலங்கள் உறுதியாக உள்ளதா என்று ஆய்வு செய்து மக்களுக்கு அரசுத் தெளிவுபடுத்தவேண்டும்" என்று வலியுறுத்திய வாசன், "காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை. இந்த அவல நிலைக்கு பொதுப்பணித் துறையை காரணம்.  நீர்நிலை மேலாண்மையில் அ.தி.மு.க. அரசின் மெத்தனப்போக்கு தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" என்று சாடினார் ஜி.கே.வாசன்.