முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
உலகம் முழுவதும் இன்று புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

2022ம் ஆண்டு விடை பெற்று புதிதாக பிறக்கின்ற 2023ம் ஆண்டை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி புதுவை, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுகூடி ஆடல், பாடலுடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசு வழங்கிய முதல்வர்; அகவிலைப்படி 38% உயர்வு
மேலும் முதல்வர், பிரதமர் உள்பட பல்வேறு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாரி வருகின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
6வது நாளாக உண்ணாவித போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள்; குழு அமைக்க முதல்வர் உத்தரவு
அப்போது கருணாநிதியின் நினைவிடத்தில் “தலைநிமிர்ந்த தமிழகம், மனம் குளிருது தினம் தினம்” என்ற வாக்கியம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முதல்வருடன் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, கே.என்.நேரு, சேகர்பாபு, சாமிநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.