MK Stalin: விமானக் கோளாறு காரணமாக முதல்வரின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் டெல்லி பயணம் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை காலை 6 மணிக்கு முதல்வர் சென்னையில் இருந்து டெல்லி செல்வார் என்றும் காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவைச் சந்தித்துப் பேசுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிண்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் டெல்லி செல்கிறார்.
பெண்களுக்கு வேலை நேரம் குறைப்பு... வெளியானது சூப்பர் அறிவிப்பு; எங்கே தெரியுமா?
முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரைச் சந்திக்க 11.30 மணிக்கு நேரம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் குடியரசுத் தலைவர் இடையேயான சந்திப்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்பு முடிந்தவுடன் வேறு எந்த நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்துகொள்வதாகத் திட்டமிடப்படவில்லை. எனவே முதல்வர் குடியரசுத் தலைவரைச் சந்தித்ததும் தமிழகம் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளில் சென்னையில் உள்ள நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மருத்துவமனை கட்டிடம் 6 தளங்களுடன் சுமார் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
Watch Video: ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து; அண்ணாமலை முன்பு காண்டான பாஜக தலைவர் ஈஸ்வரப்பா!!
இதயம் மற்றும் நெஞ்சக அறுவை சிகிச்சைத் துறை, மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, இரத்தநாள அறுவை சிகிச்சைத் துறை, குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சைத் துறை, புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சைத் துறை போன்ற உயர்சிறப்பு பிரிவுகள் இந்த மருத்துவமனையில் இயங்கும்.
திநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி 1000 படுக்கை வசதியுடன் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவை அழைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, கிண்டி பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் டெல்லி செல்கிறார்.
470 புதிய விமானங்களை இயக்க 1000 விமானிகளைத் தேடும் ஏர் இந்தியா