ஏர் இந்தியா விரிவாக்கம்! 470 புதிய விமானங்களை இயக்க 1000 விமானிகளுக்குப் பணி வாய்ப்பு

டாடா குழுமத்தின் கீழ் இயங்கிவரும் ஏர் இந்தியா நிறுவனம் புதிதாக வாங்கும் விமானங்களுக்காக 1000 க்கு மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

Air India To Hire Over 1,000 Pilots In Mega Drive After 470 Aircraft Order

டாடா குழுமத்திற்குச் சொந்தமான விமான நிறுவனமான ஏர் இந்தியா தனது விமான நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் திட்டத்தில், கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த உள்ளது.

தற்போது 1,800க்கும் மேற்பட்ட விமானிகளைக் கொண்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம் போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட 470 விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது. சமீபத்திய ஏர்பஸ் நிறுவன ஆர்டரில் 210 A320/321 Neo/XLR மற்றும் 40 A350-900/1000 ஆகிய விமானங்களை வாங்க உள்ளது. இதேபோல போயிங் நிறுவனத்திற்கு அளித்துள்ள ஆர்டர் மூலம் 190 737-Max, 20 787 மற்றும் 10 777 விமானங்கள் வாங்க உள்ளது.

பிளாக் ஆன இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்டுத் தருவதாக ரூ.90,000 அபேஸ் செய்த இளைஞர் கைது

பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு ஜனவரியில் டாடா குழுமத்தால் வாங்கப்பட்டது.  அதன்பின் இந்நிறுவனம் விமான சேவையை விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது. வியாழக்கிழமை வெளியான ஒரு விளம்பரத்தின்படி, 1,000 க்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த இருப்பதாகத் தெரிகிறது.

ஏர் இந்தியா நிறுவனம் A320, B777, B787 மற்றும் B737 விமானங்களில் கேப்டன்கள் மற்றும் முதல் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர் பணிகளுக்கு பல வாய்ப்புகள் உள்ளன என்றும் மேலும் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஏர் இந்தியா நிறுவனம் விமானிகளின் சம்பளம் குறித்தும் சேவைகள் மறுசீரமைப்பு குறித்தும் எடுத்துள்ள சமீபத்திய முடிவு குறித்து அந்நிறுவனத்தின் விமானிகள் கவலைகளை தெரிவிக்கின்றனர்.

கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!

ஏப்ரல் 17 அன்று, ஏர் இந்தியா விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட இழப்பீட்டுக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியது. அதற்கு ஏற்கெனவே இந்திய கமர்ஷியல் பைலட்ஸ் அசோசியேஷன் மற்றும் இந்தியன் பைலட்ஸ் கில்ட் ஆகிய இரண்டு விமானிகள் கூட்டமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த விதிகளை நிர்ணயிக்கும் முன் தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

டாடா குழுமத்தின் கீழ் நான்கு விமான நிறுவனங்கள் உள்ளன. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகிய மூன்று நிறுவனங்கள் தவிர விஸ்தாரா நிறுவனத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸுடன் இணைந்து நிர்வகிக்கிறது. விமான சேவை விரிவாக்கத்திற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏஐஎக்ஸ் கனெக்ட் ஆகியவை இணைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதேபோல, விஸ்தாராவையும் ஏர் இந்தியாவுடன் இணைக்கும் பணியில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

மோடி ஒரு விஷப் பாம்பு! சர்ச்சை பேச்சுக்கு புது விளக்கம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் கார்கே

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios