Asianet News TamilAsianet News Tamil

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை உயர்வு - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

அரசுப் பள்ளி, கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

MK stalin order to increase in food allowance for government school and college hostel students smp
Author
First Published Oct 4, 2023, 9:03 PM IST

அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1100 லிருந்து ரூ.1500ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சிக்கிம் வெள்ளம்: ராணுவ வீரர் மீட்பு!

இந்த நிதியை வைத்து தான், விடுதி காப்பாளர்கள் மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1100 லிருந்து ரூ.1500ஆகவும் உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios