Asianet News TamilAsianet News Tamil

பாஜக வாஷிங் மெஷின்; மோடியின் குடும்பம் இதுதான்: முதல்வர் ஸ்டாலின் சாடல்!

மோடியின் குடும்பம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

MK Stalin criticized ed it cbi are pm modi family bjp is washing machine smp
Author
First Published Apr 3, 2024, 4:46 PM IST

பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதலே எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. பாஜக ஆளாத மாநிலங்களின் கட்சிகள் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் எனவும், அப்படி இல்லாத கட்சிகளுக்கு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், ஊழல் ஒழிப்பு குறித்து பேசும் பாஜக, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது. அவர்களே பாஜகவுக்கு வந்தவுடன் அவர்கள் மீதான ஊழல் வழக்குகள் கைவிடப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், பாஜகவில் இணைந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தியை சுட்டிக்காட்டி, பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மோடியின் குடும்பம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐதான் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் கழுகு பார்வையில் தமிழகம்? மாநிலம் முழுவதும் தீவிர ரெய்டு!

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் தோலுரித்துள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு. பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

 

 

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது! மோடியின் குடும்பம் என்பது ‘E.D – I.T. – C.B.I.’தான்!” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios