திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தீபாவளி பரிசு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு பரிசாக புதிய பதவிகள் வழங்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

MK Deepavali gift to dmk executives to create new boards smp

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்த கூட்டணியில் திமுக முக்கிய அங்கம் வகிக்கிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

மேலும், மற்ற மாநிலங்களை விட கூடுதல் தொகுதிகளில் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டும் எனவும், அப்போதுதான் கூட்டணிக்குள் மதிப்புமிக்க கட்சியாக இருக்க முடியும் எனவும் ஸ்டாலின் கருதுவதாக தெரிகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஆட்சியில் இல்லாதபோதே திமுக கூட்டணி 39 தொகுதிகளை வென்றது. இந்த முறை ஆட்சியில் இருப்பதால், 40க்கு 40ஐயும் வெல்ல வேண்டும் என்பது ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது.

எனவே, தேர்தல் பணிகளை இப்போதே திமுக தொடங்கு விட்டது. திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமை முதல்வரே நேரடியாக சென்று தொடங்கி வைத்து உரையாற்றி வருகிறார். மாணவரணிக்கு தனியாக பயிற்சி முகாம்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இளைஞரணியும், மகளிரணியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.

இருப்பினும், முதல்வர் ஸ்டாலின் நினைத்த வெற்றியை பெற வேண்டுமானால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். ஆனால், திமுக நிர்வாகிகள் பலரும் தற்போது அதிருப்தியில் இருப்பதாக உளவுத்துறை மூலம் மேலிடத்துக்கு ஒரு ரிப்போர்ட் சென்றுள்ளது. அதாவது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள், ராஜ்யசபா சீட்டை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள், எம்.எல்.ஏ. அகியும் அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள், அமைச்சராகியும் எதிர்பார்த்த துறை கிடைக்காதவர்கல் என பலரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதில் முதற்கட்டமாக எந்த பதவியிலும் இல்லாதவர்களை குளிர்விக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளாராம்.

யுனெஸ்கோ படைப்பாற்றல் மிக்க நகரங்கள்: பட்டியலில் இணைந்த கோழிக்கோடு, குவாலியர்!

திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கட்சிக்காக உழைத்த பலரும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள், புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கு சில முக்கியப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில வாரியங்களில் மாற்றுக் கட்சியினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது சொந்த கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாக தெரிகிறது. எனவே, புதிய வாரியங்களை உருவாக்கவும், ஏற்கனவே இருக்கும் வாரியங்களில் திமுக நிர்வாகிகளை நியமிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சர் பதவிக்கு நிகரானது என்பதால், வாரியத் தலைவர் பதவி மற்றும் உறுப்பினர் பதவிகளை பிடிக்க இப்போதே திமுகவுக்குள் போட்டாப்போட்டி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, திமுகவில் மாவட்ட வாரியாக காலியாக உள்ள அணிகளுக்கான நிர்வாகிகள் பட்டியலையும் முழுமையாக நிரப்ப திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. 

இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, மேற்கண்ட பதவிகளை பிடிக்க, பலரும் தங்களுக்கு தெரிந்த சேனல்கள் வழியே காய்களை நகர்த்தி வருவதாக தெரிகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios