Asianet News TamilAsianet News Tamil

திடீரென காணாமல் போன என்ஜினீயர் சடலமாக மீட்பு.. என்ன காரணம்? போலீஸ் தீவிர விசாரணை..!

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணகிரி(21). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 

Missing engineer recovered as dead body
Author
First Published Jul 30, 2023, 3:23 PM IST

திடீரென காணாமல் போன என்ஜினீயர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணகிரி(21). இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மாலை அருணகிரி திடீரென மாயமானார். இவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  பெற்றோர் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை  மீட்ட போது உயிரிழந்தது காணாமல் போன அருணகிரி என்பது தெரியவந்தது. அவரது உடலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருணகிரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios