minorities are attacked in Tamil Nadu is false news - Hindu munnani
கன்னியாகுமரி
தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வெளிவரும் தகவல் பொய்யானது என்று இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலர் முருகானந்தன் தெரிவித்தார்.
இந்து முன்னணி மாநிலப் பொதுச் செயலர் முருகானந்தன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர், "இந்து முன்னணி பிரமுகர் ஷாஜாராம் வழக்கு தொடர்பாக மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுத்து வருகிறார். அவர் மீது மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக வெளிவரும் தகவல் பொய்யானது.
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறுபான்மையின மக்களுக்கே ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
இந்து இயக்கங்களில் பணியாற்றி வரும் தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது, இந்து முன்னணி மாவட்டத் தலைவர் குழிச்சல் சி. செல்லன், மேல்புறம் ஒன்றிய பொதுச் செயலர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
