5 முக்கிய அமைச்சர்களின் கோடிக்கணக்கான பணம் எங்கே உள்ளது?....ராம மோகன ராவ் வெளியிட்ட பகீர் தகவல்…

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியான நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை நடத்தி வருகின்றன.

அரசு மேலிடத்துக்கு நெருக்கமானவர் என கூறப்படும் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் தங்கக் கட்டிகள் நாட்டையே மலைக்க வைத்தது.

இந்நிலையில் சேகர் ரெட்டி அளித்த தகவல்களின் அடிப்படையில் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீடுகள்,அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடைபெற்றது.

தலைமைச் செயலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ராம மோகன ராவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் பல உண்மைகைளை உளரிக் கொட்டியதாக கூறப்படுகிறது.

அதில் 5 முக்கிய அமைச்சர்களுக்கு சொந்தமான பணம் பற்றிய தகவல்களும் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரிதுறை அதிகாரிகள் வழியாக கசிந்துள்ள இந்த தகவல்களால் முக்கிய அமைச்சர்களும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கலங்கிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.