அர்ச்சகர் பயிற்சியை முடித்த பெண்களுக்கு ஸ்மார்ட்போன், ரூ.25,000 நிதியுதவி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களையும் நேரில் சந்தித்துப் பாராட்டி இருக்கிறார். அத்துடன் நில்லாமல் அவர்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவியும் ஸ்மார்ட்போன் வழங்கி வாழ்த்து கூறியிருக்கிறார்.

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை முடித்த மூன்று பெண்களையும் நேரில் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25,000 நிதியுதவியும் ஸ்மார்ட்போறும் வழங்கியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் ஆண்கள் மட்டுமின்றி பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 2022 -2023ஆம் ஆண்டில் இந்தப் பயிற்சியில் 3 பெண்கள் உட்பட 94 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு அதற்கான அரச்சகர் சான்றும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, முதல் முறையாக அர்ச்சகர் பயற்சியை முடித்திருக்கும் ரஞ்சிதா, கிருஷ்ணவேனி, ரம்யா ஆகிய 3 பெண்களும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் கற்றவர்கள். இவர்கள் மூவருக்கும் படிப்பை முடித்து அண்மையில் சான்றிதழ் பெற்றுவிட்டனர். இந்த ஆண்டும் புதிதாக 15 பெண்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் இணைந்துள்ளனர்.
முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா
இந்நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 3 பெண்களையும் நேரில் சந்தித்துப் பாராட்டி இருக்கிறார். அத்துடன் நில்லாமல் அவர்களுக்கு தலா ரூ.25,000 நிதி உதவியும் ஸ்மார்ட்போன் வழங்கி வாழ்த்து கூறியிருக்கிறார்.
பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்று வன்புணர்வு; திருப்பூரில் நடந்த கோர சம்பவம்!
இந்தச் சந்திப்பு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:
"அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை நிரந்தரமாக நீக்கிய, நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்க உத்தரவிட்டார்கள். அதன்படி, ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகிய மூன்று சகோதரிகள் அர்ச்சகர் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அந்த சகோதரிகளை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
அவர்களுடைய பணிக்கு பயனளிக்கும் வகையில் ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கினோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், சாதி ஏற்றத்தாழ்வை மட்டுமன்றி, ஆண் - பெண் பாகுபாட்டையும் போக்கியுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். அர்ச்சகர் பயிற்சி முடித்த சகோதரிகளின் பணி சிறக்கட்டும்."
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக, பெண்கள் அர்ச்சகர்கள் படிப்பை முடித்திருப்பது பற்றி கருத்து கூறிய முதல்வர் ஸ்டாலின், "பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்" என ட்விட்டரில் பதிவிட்டார்.
நாமக்கல் சிறுமி உயிரிழந்த சோகம்... திமுக ஆட்சியில் தொடர லாயக்கில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்