சுதந்திர தினத்தன்று சூறாவளி திட்டம் தொடங்கிய செங்கோட்டையன்..! அரசு பள்ளிகளில் Pre-KG, LKG, UKG..! 

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் pre kg, lkg , ukg வகுப்பினை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் அனைவரின் பாராட்டையும் பெற்றார் 

கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற பின் கல்வி துறை புதுப் பொலிவோடு செயல்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக மருத்துவர் ஆக வேண்டும் என்றால் அதற்காக அகில இந்திய அளவில் நீட்  தேர்வு நடத்தப்படுகிறது. அதற்கான வகுப்பு எடுக்க இலவசமாக பல்வேறு இடங்களில் அரசு சார்பில் வகுப்புகள் எடுக்கப்பட்டது.

மாணவர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக லண்டனில் இருந்து 100 ஆசிரியர்கள் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

புத்தகத்தில் மாற்றம் கொண்டு வந்தது...தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக சுதந்திர தினத்தையொட்டி அரசு பள்ளிகளில் Pre-KG, LKG, UKG வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, சோதனை முயற்சியாக 32 பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் இந்த திட்டம் பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றார் என திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் பேசினார். இந்த அற்புத திட்டம் மூலம் நடுத்தர மற்றும் சாதாரண மக்கள் கூட அவர்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளியில் படிக்க வைத்தே பெரிய ஆளாக்க முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.