டுவீட் செஞ்சாலுமா கைது செய்வீங்க; இதுதான் ஜனநாயகமா?மத்திய அமைச்சர் கேள்வி!!
டுவீட் செய்வதற்காக கைது செய்வது என்பது எல்லை மீறல், சட்டத்தின் உரிமை மீறல் மற்றும் பேச்சு சுதந்திரத்தை மீறுவதாகும் என்று தமிழ்நாடு பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா கைதுக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எஸ்.ஜி. சூர்யா கைதுக்கு கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், ''யுபிஏ ஆட்சியின்போது ராகுலின் காங்கிரஸ் Sec66A-ஐ தவறாகப் பயன்படுத்தி இருந்தது. இவர்களது கூட்டணியான தேசியாவாத காங்கிரஸ் தலைவரும் இதையேதான் செய்தார். தற்போது ராகுல் காங்கிரஸின் இயல்பான தந்திரம் இதுதான். தற்போது மு.க. ஸ்டாலினின் பெயரை அவர் குறிப்பிடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.
சுதந்திர பேச்சாளர்கள், "செயல்பாட்டாளர்கள்" இப்போது அமைதியாக இருக்கக்கூடாது அல்லது பாசாங்குகாரர்களாக இருக்கக் கூடாது.
ஜனநாயகத்திற்கு இந்த வகையான அச்சுறுத்தல் மற்றும் "மதச்சார்பற்ற" கூட்டாளிகளால் அச்சுறுத்தல் போன்றவற்றை ராகுல் தனது சுற்றுப் பயணங்களில் குறிப்பிட்டு "ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது" என்று தெரிவித்து இருக்கலாம்.
அண்ணாமலையின் வலது கரத்தை நள்ளிரவில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்.!
எஸ்.ஜி. சூர்யா ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருந்த துப்புரவுத் தொழிலாளியின் மரணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெறுவார். இந்த வகையான வற்புறுத்தல் மற்றும் மிரட்டல்களில் இருந்து அவர் விடுவிக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் போராடுவோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா எப்போதும் சமூக ஊடகங்களில் செய்திகளை பரிமாறி வருபவர். எங்கு பிரச்சனை என்றாலும் அதை தட்டிக் கேட்பார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வலது கரமாக இருந்து வருகிறார். இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் குறித்து டுவிட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டு இருந்தார். அதில், ''கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்'' என பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து மதுரை காவல் ஆணையரிடம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நேற்று இரவு 11 மணியளவில் சென்னை தி.நகர் உள்ள அவரது இல்லத்தில் இருந்து எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.