அரசு கல்லூரிக்கு 1895 கெளரவ விரிவுரையாளர்கள் தேர்வு..! விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயித்த அமைச்சர் பொன்முடி

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள  உதவி பேராசிரியர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய தற்காலிகமாக 1895 கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

Minister Ponmudi said that 1895 honorary lecturers will be selected for the government college

பணி நியமன ஆணை வழங்கிய பொன்முடி

அரசு கலைக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் பேராசிரியர்கள் 192 பேருக்கு  பணி மாறுதல் நியமன ஆணைகளை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப 4000 பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான பணி நடைபெற்று வருகிறது. 

புயலால் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை..! சீரமைக்கும் பணி தீவிரம்.! நாளை மீண்டும் திறக்கப்படுகிறது

Minister Ponmudi said that 1895 honorary lecturers will be selected for the government college

கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு

இது தவிர மீதமுள்ள  1895 காலி பணியிடங்கள் மாணவர்களின் நலன் கருதி கௌரவ விரிவுரையாளர்களாக தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள தகுதியானவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணி நாடுனர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் 20000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆக்‌ஷனில் இறங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்.. 4 அரசு மருத்துவர்கள் அதிரடி சஸ்பெண்ட்.. என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios