குடிப்பவர்களைப் பற்றி பேசவே பயமாக உள்ளது.! தவறான அர்த்தமாக புரிந்து கொள்கிறாங்க -அலறி அடித்து ஓடும் முத்துசாமி
டாஸ்மாக்கில் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுசூழல் பிரச்சனைகளை மனதில் வைத்து தான் டெட்ரா பேக் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டு கருத்துக்களை கேட்டுக்கொண்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மதுவிற்பனையை ஆதரிக்கும் துறை
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மற்றும் வீட்டுவசதித் துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துச்சாமி கலந்து கொண்டு 1012 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமியிடம் சென்னை உயர்நீதிமன்றம் 11 முறைகேடான பார் டெண்டர் வழக்கில் மதுவிலக்கு அமல் படுத்தும் துறையே மதுவிற்பனை ஆதரிக்கும் துறையாக உள்ளதாக தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
பேசவே பயமாக உள்ளது
எந்த தவறும் இல்லாமல் இந்த துறை நடத்த வேண்டும் என்பது தான் எங்களுது நோக்கம். குடிப்பழக்கம் உள்ளவர்களை கேவலப்படுத்தாமல் அவர்களை பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும். நாங்கள் என்னதான் அனுகுமுறையை கூறினாலும் அதனை எட்டுகட்டி தவறான அர்த்தத்தில் தான் வருகிறது. அதில் உள்ள நல்ல அர்த்தத்தை வெளியிடுவதில்லை. அதனால் அதனை பற்றி பேசவே பயமாக உள்ளது. எங்களது நோக்கம் வியாபாரத்தை பெரிது படுத்தும் நோக்கம் இல்லையென கூறினார். பாட்டில்களால் ஏற்படும் பிரச்சனைகளை மனதில் வைத்து தான் டெட்ரா பேக் கொண்டு வர ஆய்வு மேற்கொண்டும் கருத்துக்களை கேட்டுக்கொண்டு உள்ளோம். ஆனால் நாங்கள் இன்னும் கொண்டு வர வில்லை. ஆய்வு செய்த பிறகு இறுதி முடிவை எடுப்போம் என தெரிவித்தார்.
கோவை மாவட்ட செயலாளர் ஆடியோ
கோவை திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பேசியாக வெளியான ஆடியோ தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மாவட்ட செயலாளர் பேசியதாக வெளியான ஆடியோ தவறான ஆடியோ, அந்த ஆடியோ சித்தகரிக்கப்பட்டவை. இது பற்றி தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அப்படி பேசக்கூடிய நபர் இல்லை எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்