ஜெருசலேம் புனித யாத்திரை திட்டம் என்ன ஆச்சு..? அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்
ஜெருசலேம் புனித யாத்திரை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைப்பெற்று வருவதாகவும் கடந்த காலங்களைவிட கூடுதலானோர் செல்ல முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

ஹஜ் புனித பயணம்
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் முக்கியமானதான புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 3 ஆண்டுகள் கேரளா சென்று அங்கிருந்து ஹஜ் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது. இதனை தமிழகத்தில் இருந்து ஹஜ் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இதனையேற்ற மத்திய அரசு சென்னையில் இருந்து ஹஜ் பயணம் அனுமதி அளித்திருந்தது. அந்த வகையில் இந்த வருடமும் சென்னை வழியாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் சென்னை விமான நிலையத்தில் இருந்து 4,161 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டனர்.
முதல் குழு சென்னை திரும்பியது
ஹஜ் பயணம் சிறப்பாக முடிவடைந்ததையடுத்து முதற்கட்டமாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 150 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். அவர்களை சென்னை விமான நிலையம் வந்த ஹஜ் பயணிகளை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், முதலமைச்சரின் நடவடிக்கையால் சென்னையில் இருந்து ஹஜ் யாத்திரை மேற்கொண்டுவிட்டு பயணிகள் தமிழகம் திரும்பி உள்ளனர். ஹஜ் பயணம் சென்று வந்தவர்களை தமிழக முதலமைச்சரின் சார்பாக வரவேற்றோம்.
ஜெருசலேம் புனித பயணம்
ஹஜ் பயணத்திற்கு மானியமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜெருசலேம் புனித பயணத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டு விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது. கடந்த காலங்களை விட கூடுதலானோர் பயணிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஜெருசலேம் செல்வோருக்கு மானியமாக 37 ஆயிரம் ரூபாயும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ60 ஆயிரமாக மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார். தகுதி உள்ள முதல் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மானியம் பிரித்து வழங்கப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்