தமிழகத்தில் கொரோனா க்ளஸ்டர் பாதிப்பாக மாறவில்லை.! ஆக்சிஜனும் தேவைப்படும் நிலையும் இல்லை- மா. சுப்ரமணியன்
தமிழகத்தில் கொரோனா பரவல் குழு,குழுவாக ஏற்படும் பாதிப்பாக இல்லை என்றும் புதிய கொரோனா வைரஸ் திரிபின் வீரியம் குறைவாகவே உள்ளது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது. ஆயிரத்திற்கும் குறைவான அளவில் பதிவான கொரோனா பாதிப்பு தற்போது 35 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஒத்திகையை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை படி தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒத்திகை நிகழ்வானது நடைபெறுகிறது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாதுகாப்பு ஒத்தியை நேரடியாக பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுவதாக கூறினார்.
கொரோனா- குழு பரவலாக மாறவில்லை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 369 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 1900 ஆக இருப்பதாகவும் தெரிவித்தார். விமானம் மூலம் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதே நேரத்தில் உயிரிழப்பு ஏதும் நேற்றைய தினம் பதிவாகவில்லையென தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பானது தனித்தனியாகவே ஏற்படுவதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குழு பரவலாக இல்லையென கூறினார். எனவே ஐசியூவில் வைத்து சிகிச்சை பெற வேண்டிய நிலை தற்போது இல்லையென்றும் ஆக்ஸிஜன் வசதி தேவைப்படும் அளவிற்கு கொரோனா பாதிப்பு இல்லையெனவும் கூறினார். இருந்த போதும் தமிழக சுகாதாரத்துறை படுக்கை வசதிகள், பிபிடி கிட்கள் மற்றும் மருந்தகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்