தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதா.? நடந்தது என்ன.? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவர்கள் தகவல்
குழந்தை முகமது தஹிர் கை அகற்றப்பட்ட விவாகரத்தில் சிகிச்சையில் ஏதாவது தவறு இருந்தால் தனியார் மருத்துவர் அழைத்து வாருங்கள். அவர்கள் கூட சோதனை செய்யட்டும். நாங்கள் செலவு செய்து அந்த மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்யச் சொல்கிறோம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்.
குழந்தை உடல்நிலையில் பாதிப்பு
மருத்துவர்களின் கவனக்குறைவால் கை அகற்றப்பட்ட குழந்தை முகமது தஹிரை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரில் வந்து மருத்துவம் மற்றும் மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த முகமது தஹீர் என்கிற குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளார். அவருக்கு இருதயத்தில் கோளாறு மூளையில் நீர்க்கசிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்துள்ளது அதனுடன் பிறக்கும்போதே சாதாரண குழந்தையை விட 1. 5 கிலோ என்கிற பாதி எடையில் இருந்துள்ளார்.
மேலும் குழந்தைக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக பலமுறை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக குழந்தைக்கு உடலில் ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கருவி கடந்த மாதம் 25ஆம் தேதி மலத்துளையின் வழியாக வெளியே வரவே அந்த சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறினார். இந்தநிலையில் குழந்தை சிகிச்சையில் ஏதாவது தவறு இருந்தால் தனியார் மருத்துவர் அழைத்து வாருங்கள் அவர்கள் கூட சோதனை செய்யட்டும். நாங்கள் செலவு செய்து அந்த மருத்துவரை அழைத்து வந்து பரிசோதனை செய்யச் சொல்கிறோம் என கூறினார்.
சிகிச்சையில் ஏதேனும் தவறு இருந்தால் கண்டிப்பாக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார். மேலும் குழந்தைக்கு கையில் நிறம் மாறுதல் ஏற்பட்டவுடன் அங்கிருந்த ஒரு மருத்துவர் ஒரு மருந்தை பரிந்துரை செய்ததாகவும் அந்த மருந்து மருத்துவமனையில் இல்லை என்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், அந்த மருந்து அதிகளவில் மருத்துவமனையில் உள்ளது. ஏன் பெற்றோர்கள் வெளியே வாங்கி வந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். மேலும் மருத்துவர் குழு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தவுடன் நாளை 5 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பேசிய ராஜிவ் காந்தி மருத்துவமனை டீன் தேரணி ராஜன், இந்தக் குழந்தை 32 மாதத்தில் பிறந்த குறை மாத குழந்தை என்றும் பிறக்கும்போதே உடலில் பல்வேறு பிரச்சனைகளுடன் பிறந்துள்ளது. மேலும் பிறந்த மூன்றரை மாதத்தில் தலையின் சுற்றளவு அதிகரித்ததால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போதே அந்த குழந்தைக்கு மாரடைப்பு வரை சென்று காப்பாற்றப்பட்டது. அப்போதுதான் மூளையில் சேரும் நீரை வயிற்றுக்கு கொண்டு வந்து சிகிச்சை செய்யும் முறையில் இந்த ஸ்டண்ட் கருவி பொருத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அந்த ஸ்டண்ட் கருவி கடந்த மாதம் மலத்துளையின் வழியாக வெளியே வரவே குழந்தை மீண்டும் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த ஸ்டாண்ட் பொருத்தப்பட்டதாக கூறினார். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நரம்பியல் துறை கண்காணிப்பில் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது குழந்தைக்கு மருந்துகள் கையில் உள்ள நரம்புகளின் மூலம் வழங்கப்பட்டது. அப்போது குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் ரத்த திரவ நிலையில் மாறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனை உருவாகியுள்ளது.
இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி குழந்தையின் கையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் கையில் ரத்தக்குழாய் அடைப்பு இருப்பதால் கையை அகற்றினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை உருவாகியுள்ளது அதனால் கையை அகற்றி மறுத்துவர்கள் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்