2010-ல் பி.இ படித்து பட்டம் பெற முடியாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பி.இ பட்டத்தை 7 ஆண்டுகளுக்கு முடிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொறியியல் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெறாத மாணவரகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் 2010-ம் ஆண்டு வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், பொறியியல் படித்து தேர்ச்சி பெறாதவர்களுக்காக அடுத்த ஆண்டு சிறப்பு தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, 2018-ம் ஆண்டின் பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் சிறப்பு தேர்வுகள் நடைபெறும் எனவும், எனவே, 2010-ம் ஆண்டு வரை பொறியியல் படித்து தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.