மிக்ஜம் புயல் காரனமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தற்போது புதுச்சேரிக்கு 760 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 780 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 3-ம் தேதி புயாலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.

இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 4-ம் தேதி வட தமிழகம் – மசூலிப்பட்டனம் இடையே கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வரையிலும் அவ்வப்போது 80 கி.மீ வரையிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக வரும் 4-ம் தேதி திருவள்ளூரில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் X வலைதள பதிவில் “ எனவே எதிர்பார்த்த ரெட் அலர்ட் வந்துவிட்டது. சென்னை, திருவள்ளூருக்கு மழை காட்டும்போதேல்லாம், திருவள்ளூரை விட சென்னையில் தான் அதிக மழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதாவது திருவள்ளூருக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தாலும், சென்னையில் அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே சென்னை, திருவள்ளூர் மக்கள் 3, 4 ஆகிய தேதிகளில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

முன்னதாக இந்த புயலின் பாதையை வைத்து கணித்திருந்த பதிவிட்ட பிரதீப் ஜான், இந்த பலத்த காற்றை விட மிக அதிக மழையை கொடுக்கும் என்று பதிவிட்டிருந்தார். அவரின் பதிவில் “ கடந்த 20 ஆண்டுகளில் தென் கிழக்கு அல்லது தெற்கில் இருந்து மேற்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்த புயல்கள் அதிக மழையை கொடுத்துள்ளன. 2006-ம் ஆண்டு ஓக்னி புயல், 2020-ம் ஆண்டு நிவர் புயல் 2008-ம் ஆண்டு நிஷா புயல் ஆகியவை பலத்த காற்றை காட்டிலும் அதிக கனமழையை கொடுத்தன.” என்று குறிப்பிட்டிருந்தார். 

மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று... இங்கெல்லாம் மிக கனமழை கொட்டப்போகுது.. வானிலை மையம் எச்சரிக்கை..

இந்த புயல் வட தமிழகம், சென்னைக்கு அருகே கரையை கடப்பதால் மிக கனமழையை எதிர்பார்க்கலாம். வட தமிழக மாவட்டங்களுக்கு டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்படலாம் என்று கூறியிருந்தார். அவர் கணித்த படியே தற்போது திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.