மிக்ஜாம் புயலால் தத்தளிக்கும் தலைநகரம்.. ஆனால் சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும்?

மிக்ஜாம்  புயல் சென்னையை புரட்டிப்போட்ட நிலையில், சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்

Michaung cyclone in chennai after heavy rains how will be the weather today  Rya

மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த புயல் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தை விட இந்த ஆண்டு  மோசமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, நீர் நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகள் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.மேலும் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது, தொலைதொடர்பு சேவையும் கிடைக்காததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சென்னையில் 80% மின்சாரம் சீரமைக்கப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்துள்ளது. மழை நீர் தேங்கி உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்ட உடன் மின்சாரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் வடிந்துவிட்டாலும் இன்னும் பல இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். சென்னையில் இன்று மழைக்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வெயில் இருக்கும் என்று சாட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகின்றன. சென்னையில் 27 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் பதிவாகக்கூடும்.

வரலாறு காணாத பெருமழை.. உடனே 5,060 கோடி வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, உள்ளிட்ட இடங்களில் 29 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக்கூடும். பெரம்பலூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி ஆகிய இடங்களில் 31 டிகிரி செல்சியஸ் பதிவாகும். மதுரையில் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும். கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களிலும் 29 முதல் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios