MGR. Decide to release the figure fried coin
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஓ.பி.எஸ். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
அதிமுக நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.
எனது வேண்டுகோளினை ஏற்று விரைவில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு விழாவின் பொழுது இந்த நாணயம் வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
