அரியலூர்

அரியலூரில் ஆகஸ்டு 23-ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அரியலூர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் ஆகஸ்டு 23-ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான கால்கோள் விழா நேற்று நடைப்பெற்றது.

இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி,

வேளாண் துணை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்,

மாவட்ட ஆட்சியர் க.லட்சுமிபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்குமார், செயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என். ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் விழா நடைபெறும் இடத்தைப் பார்வையிட்டு விழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். மற்றும் விழாவில் மேற்கொண்டு செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்தனர்.