ஆரணி மற்றும திருவண்ணமலையில் தடையை மீறி  வைக்கப்பட்ட எம்ஜிஆர் மற்றும்  ஜெயலலிதா சிலைகள் இரவோடு இரவாக அகற்றியுள்ளனர்

இதன் காரணமாக போலீசாருக்கும்,அதிமுக ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு  உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுஞ்சாலை பகுதியை ஆக்கிரமித்து ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு ஆங்காங்கு சிலைகள் வைக்கப் பட்டு உள்ளதாக தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்த வண்ணம இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை அறிந்து வந்த அதிமுகவினர் பொலிசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து  உள்ளனர். ஒரு கட்டத்தில் போலிசாற்கும் அதிமுகவினருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது.

மேலும் தடையை மீறி எங்கெல்லாம் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறித்த  ஆய்வு நடைப்பெற்று வருகிறது. திடீரென சிலைகள் அகற்றப்பட்டுள்ளதால் அதிமுக ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.