சென்னையில் மேலும் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான 2வது கட்ட திட்ட அறிக்கை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்படைத்துள்ளது.
சென்னையில் கோயம்பேடு முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்ட திட்டத்தில், 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்குவது குறித்து பல்வேறு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாதவரத்தில் இருந்து மயிலாப்பூர் வழியாக சிறுசேரி வரையிலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு, பெரும்பாக்கம் வழியாக சோழிங்கநல்லூர் வரையிலும், நெற்குன்றத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விவேகானந்தர் இல்லம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளது.

105 கிலோ மீட்டர் தூரத்திற்கான இந்த மெட்ரோ ரயில் பணிகளை முடிக்க 45ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என மெட்ரோ ரயில் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்பித்துள்ளது.
