கம்பம்,

ரேசன் கடைகளில், வழங்கப்படும் பொருட்களுக்கு அதிகாரிகள் முறைகேடாக பதிவு செய்வதால், எங்களுக்கு மெசஸ் வருகிறது. ஆனால், பொருட்கள் கிடைப்பதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கம்பம் நகராட்சியில் 20–க்கும் மேற்பட்ட ரேசன் கடைகள் செயல்படுகின்றன. இங்கு விலையில்லா அரிசி உள்பட பல்வேறு பொருட்கள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் வருகிற தீபாவளி பண்டிகையை ஒட்டி, விநியோகம் செய்யப்படும் பொருட்களை வாங்குவதற்காக ரேசன் கடைகளில் பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற புகார் தெரிவிக்கின்றனர் அந்த மக்கள்.

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது, “தீபாவளி வருவதால், ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் தர்ராங்க. இதுல, நிறைய பேருக்கு எந்த பொருளும் கிடைக்கல். ஆனால், பொருட்களை கொடுத்துட்டோம் என்று ரேசன் அட்டையில பதிவு செய்யுறாங்க. மேலும் எங்க மொபைல் போனுக்கு மெசஸ் வருது. ஆனால், நாங்க எந்த பொருளும் வாங்கல” என்று கூறிய பொதுமக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.