காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக மெரினாவில் சில  இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

விவேகானந்தர் இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடி போராட்ட்த்தில் ஈடுபட்டு உள்ளனர்.

காவிரி விவகாரத்திற்காக முகநூல் வழியாக இணைந்து போராட்டத்திற்கு வந்தோம்  என்றும்,மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம்  என இளைஞர்கள்  சென்னை மெரீனா கடற்கரையில் ஒன்று கூடினர் 

இவர்கள்  அனைவரும் முகநூல் மூலம் ஒன்று திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை  தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட  இளைஞர்களை போலீசார்  கைது  செய்தனர்