ககன் தீப் சிங் பேடி மீது புகாரா.? சாதி பாகுபாடு காட்டினாரா.? முதலமைச்சர் விசாரிக்கனும் விசிக எம்பி கோரிக்கை
ககன் தீப்சிங் பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை. அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ககன் தீப் சிங் பேடி மீது புகார்
தமிழகத்தில் மூத்த மற்றும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரியாக இருப்பவர் ககன்தீப் சிங் பேடி, சுனாமி, மழை, வெள்ளம் என அனைத்து காலத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் வேளாண் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, கஜா புயல் உள்ளிட்ட முக்கிய இயற்கை சீற்றங்களில் சிறப்பாக களப்பணியாற்றி மக்களின் பாராட்டுகளை பெற்றவர். இதனையடுத்து திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகராட்சி ஆணையராக ககன் தீப் பேடி நியமிக்கப்பட்டார். அப்போது அப்போது துணை ஆணையராக மணீஸ் நரவனே நியமிக்கப்பட்டார். ஓராண்டு சென்னை மாநகராட்சியில் பணியாற்றிய மனிஷ் தற்போது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராக உள்ளார்.
சாதி ரீதியாக கொடுமை
இந்தநிலையில் இது தொடர்பாக அவர் தலைமைச் செயலாளருக்கு 2 பக்க புகார் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அவர் தெரிவித்துள்ள புகாரில், சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். ககன்தீப்சிங் பேடியின் செயல்பாட்டால் தான் தற்கொலை முடிவுக்கு வந்ததாகவும், தன் தந்தை வந்து சாந்தப்படுத்தியதாகவும் மனிஷ் கூறியுள்ளார். வன் கொடுமை சட்டப்படி ககன்தீப்சிங் பேடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
முதலமைச்சர் விசாரிக்கனும்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் மனிஷ் தற்போதைய சுகாதாரத் துறை செயலாளர் திரு ககன் தீப் சிங் பேடிபற்றி கூறியிருக்கும் புகார் அதிர்ச்சி அளிக்கிறது. திரு பேடி கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் நான் MLA ஆக இருந்தேன்.அவர் பாகுபாடு காட்டி நான் பார்த்ததில்லை.
அவர்மீது யாரும் இப்படி புகார் சொல்லி நான் கேட்டதில்லை.உயர் அதிகாரிகள் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள் என்பது கவலையளிக்கும் ஒரு குற்றச்சாட்டு.பொது வெளியில் ஒரு IAS அதிகாரி முன்வைத்துள்ள இந்தப் புகாரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள்