medical students arrested by police about against neet exam protest

மத்திய அரசின் நீட் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நலசங்க கூட்டமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு குறித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஆனால் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதனிடையே 'நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட சட்டத்துக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். நீட் தேர்வால் தமிழகத்தைச் சேர்ந்த 98 % மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நலசங்க கூட்டமைப்பினர் பனகல் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர்களை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவத்து பாதிக்கப்பட்டது.