Asianet News TamilAsianet News Tamil

விடுமுறை அளித்தும் 14-வது நாளாக விடாமல் போராடும் மருத்துவ கல்லூரி மாணவர்கள்; கோரிக்கை இதுதாங்க...

Medical college students who do not leave for the 14th day of holidays
Medical college students who do not leave for the 14th day of holidays
Author
First Published Sep 14, 2017, 7:17 AM IST


கடலூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 14-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ஏழைகளுக்கு அளித்து வந்த இலவச மருத்துவச் சிகிச்சை நிறுத்தப்பட்டதற்கு கண்டணம் தெரிவிப்பது,

அரசு மருத்துவக் கல்லூரிக்கு நிர்ணயித்த அளவில் மட்டுமே கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் வசூலிக்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கல்லூரியின் இளங்கலை, முதுகலை மருத்துவ மாணவ, மாணவிகள் கடந்த ஆகஸ்டு 30-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையொட்டி மருத்துவக் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பின்னர் வகுப்புகள் திங்கள்கிழமை செப்டம்பர் 11 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 14-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios