Asianet News TamilAsianet News Tamil

சாந்தனின் பெயர் தமிழ் ஈழ வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் - வைகோ பேட்டி

சாந்தனின் பெயர் தமிழ் ஈழ  வரலாற்றில் என்றும்  நிலைத்து நிற்கும் என்று மறைந்த சாந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

mdmk general secretary vaiko paid last respect to santhan in chennai vel
Author
First Published Feb 28, 2024, 7:26 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் சாந்தனின் உடலுக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் பேரறிவாளன், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

காவல் தெய்வம் கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு சீர்வரிசை எடுத்து வந்த போலீஸ்; தண்ணீர் விநியோகித்த இஸ்லாமியர்கள்

அஞ்சலி செலுத்திய பின்  செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பொய் வழக்கு போட்டு 7 பேரை சிறையில் அடைத்து, அவர்கள் சிறையிலேயே வாடினர்கள். சிறையில் இருந்த சாந்தனை பார்க்க சென்ற போது அவர் எனக்கு ஆறுதல் கூறினார். நல்ல எழுத்தாளர், நிறைய சிறு கதைகள் எழுதி கொடுத்து இருக்கிறார். தாயாரை பார்க்க வேண்டும் என்பது தான் சாந்தனின் ஆசை. நான் அரசாங்கத்திற்கு ஒரே ஒரு கோரிக்கை தான் வைக்கிறேன். அரசாங்கம் மீதம் உள்ளவர்களை அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சாந்தன் மறைவு; இன்னும் அகதிகள் முகாமில் 3 பேர் இருப்பது தேச நலனுக்கு எதிரானது: திருமாவளவன்

முருகன், ஜெயக்குமார், ராபர்ட் உள்ளிட்ட 3 பேரையும் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் விரும்பும் இடத்திகற்கு அரசு அனுப்பி வைக்க வேண்டும். வாழ்க்கையின் வசந்தம் எதையும் அவர்கள் பார்க்கவில்லை. அவர்கள் நெஞ்சில் தலைவர் இருக்கிறார். இந்திய அரசும் உலக வல்லரசு நாடுகளும் தமிழ் ஈழ படையை ஆயுதங்களை கொண்டு அழித்தார்கள். ஈழ தமிழர்களை கொன்று குவித்தனர். சாந்தனின் பெயர் தமிழ் ஈழ  வரலாற்றில் என்றும் நிலைக்கும் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios