TASMAC : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! டாஸ்மாக் கடைகளுக்கு மீண்டும் விடுமுறை..எப்போ தெரியுமா ?
TASMAC : டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உள்ளது தமிழக அரசு. இந்த செய்தி மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்து உள்ளது.
தமிழகத்தில் அல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றன. ரேஷன் கடைகளில் கூட கூட்டம் விரைவாக குறைந்து விடும். ஆனால் மது கடைகளில் மட்டும் கூட்டம் எப்போதும் குறைவதே இல்லை. அதனால் மதுபான உற்பத்தி மிக அதிகமாக தயாரிக்கின்றனர்.
மே தினத்தை முன்னிட்டு மே 1ம் தேதி டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகள், கிளப்கள், ஹோட்டல் பார்கள் ஆகியவற்றில் மதுபானங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளது. அதை மீறி மதுபானங்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து உள்ளது.
அன்றைய தினம் மதுபானங்களை கடத்துதல்,மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!