புதுச்சேரியில் முக கவசம் கட்டாயம்.. மிரட்டும் கொரோனா.. 4 மாதங்களுக்கு பிறகு 100 தாண்டிய பாதிப்பு..
புதுச்சேரியில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 24 மணி நேரத்தில் 101 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 452 ஆக உயர்த்துள்ளது.இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில், மக்கள் பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு ஊழியர்கள், பொதுத்துறை, வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் 100% தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !
புதுச்சேரில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு ஒரே நாளில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏபரல் 11 ஆம் தேதி கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி உருவெடுத்தது. அதன் பின், அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனையடுத்து, பொதுஇடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்லாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியமாக இருந்தன. காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவில்லை.
மேலும் படிக்க:பம்புசெட், கிரைண்டர் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு.. தமிழகத்திற்கு பேராபத்து .. ராமதாஸ் எச்சரிக்கை..
இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அரசு மருத்துமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டன. இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,769 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரியில் 82 பேருக்கும் காரைக்காலில் 12 பேருக்கும் ஏனாமில் 16 பேருக்கும் தொற்று பாதிப்பு பதவியாகியுள்ளது.