500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற சாலைமறியலில் நூற்றுகணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் கடும் பாதிப்பை அடைந்துள்ளனர். முன் அறிவிப்பு எதுவும் செய்யாமல் மத்திய அரசு மக்களை திண்டாட வைத்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். மத்திய அரசின் இச்செயல் கருப்பு பணத்தை மீட்க உதவாது. மாற்று ஏற்பாடுகளை செய்யும் வரை பழைய நோட்டுக்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

ஏடிஎம் இயந்திரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு தேவையான பணத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பாரிமுனையில் நடந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதித்தது.

இதையடுத்து போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
