திருப்பூர்

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதற்கு திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் மீது தடியடி நடத்திய காவலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், 

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றை வலியுறுத்தி  திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலனூரில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வட்டாரச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மரியதாஸ், விஜயன், ராஜேந்திரன், சண்முகம், சசிகுமார், ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா செயலாளர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் வெங்கட்ராமன், பொன்னுச்சாமி, சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.