தாம்பரம் அருகே நடைபெற்ற திருமணத்தில், புதுமண தம்பதிகள் உடல் உறுப்பு தானம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் செல்வக்குமார். இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

திருமண விழாவில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் வந்து, மணமக்களை வாழ்த்தினர். முக்கிய பிரமுகர்கள் பலரும் பரிசு பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.‘அப்போது, திருமணத்துக்கு வந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய புதுமண தம்பதி, தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். மேலும், அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, கொடுத்தனர். 

இதையடுத்து, அவர்களுக்கான அடையாள அட்டையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், புதுமண தம்பதியிடம் வழங்கினார். இதைதொடர்ந்து, புதுமண தம்பதியின் ஆசையை போல், இரு வீட்டாரும் தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்தனர்.