காவிரி மேலாண்மை வாரியத்திற்காக நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் இளம்பெண் - இளைஞர் திருமணத்தை கைது செய்து அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்திலேயே திருமணம் செய்துவைத்தார் ஸ்டாலின்.

விழுப்புரத்தை சேர்ந்த விடுதலை  சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டரின் திருமணத்தை திருமாவளவன் நடத்தி வைப்பதாக இருந்தது ஆனால் இன்று போராட்டம் காரணமாக அவர் அங்கு செல்ல முடியாததால் திருமணம் ஆகவிருந்த ஜோடி நேராக கிளம்பி சென்னைக்கு போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளனர். 

இன்று காலை சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, மெரினா கடற்கரை சாலைகளில் மறியலில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சியினர் கலந்துகொண்டனர். இதில், ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், ஸ்டாலினை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன் ஆகியோர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். 

விழுப்புரத்திலிருந்து வந்த கல்யானமாகவிருந்த புதுமண மாப்பிள்ளையும் மணமகளும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து திருமணமாகவிருந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட அவர்களுக்கு  கைதானவர்கள் இருந்த மண்டபத்திலேயே மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் மாலை மாற்றிக்கொண்டனர். திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்டோர் முன்னிலையில் மண விழா நடைபெற்றது. 

சாலை மறியல்னு சொன்னாங்க… பேரணியா கிளம்பி மெரினாவுக்கு போறாங்க… கைது செஞ்சி பஸ்ல ஏத்திகிட்டு போனா அதை ஊர்வலமா ஆக்கிட்டாங்க... கூட்டிட்டு போய் மண்டபத்துல அடைச்சு வச்சா… அங்க கல்யாணம் நடத்தி வச்சிட்டு இருக்காங்க... என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாரதிதாசன் - ஸ்ரீமதிக்கு திருமணம் செய்து வைத்து மணமக்களை வாழ்த்திய தளபதி! இது வேற லெவல். என ஒரு தொண்டர் பதிவிட்டுள்ளார்.