சேலையூர் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மகள் அனிதா. சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு அரவிந்த் என்பவருக்கும் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடந்தது.
முன்னதாக நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருமண மண்படத்தில் மணமகன், மணமகள் ஆகியோருக்கு தனித்தனி அறை ஒதுக்கப்பட்டது. அங்கு அவர்களது உடமைகள், நகை, பணம் ஆகியவை வைத்து இருந்தனர். இதில், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி சென்றனர்.
நிகழ்ச்சி முடியும் போது கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது, மேடையில் மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் திரண்டு இருந்தனர். நிகழ்ச்சி முடிந்து மணமக்கள் அவர்களது அறைக்கு சென்றனர்.
அப்போது, பூட்டப்பட்டு இருந்த அனிதாவின் அறை கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, மேடையில் கேக் வெட்டி கொண்டாடி கொண்டிருந்தபோது, அனிதாவின் அறையில் நுழைந்த மாமநபர்கள், திருமணத்துக்கு வரதட்சனையாக கொடுக்க வைத்திருந்த 35 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
தகவலறிந்து குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில், திருமண மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை ஆய்வு செய்கின்றனர்.
