திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமேஸ்வரியின் மகன்கள் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, 

அய்யம்பாளையம் கிராமம் அருகே சென்றபோது, ராஜேஷ் என்ற இளைஞர் மீது இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. 

இந்த விபத்தில் ராஜேஷ் படுகாயமடைந்துள்ளார். இதனை அடுத்து, படுகாயமடைந்த ராஜேஷை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராஜேஷை மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக கூறப்படுகிறது. டிஸ்சார்ஜ் செய்ததற்கான சீட்டும் வழங்கப்படவில்லை. காரணம் புரியாத அவர், மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பலத்த காயம் அடைந்த தனக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுப்பதாகவும், தனக்கும் தன் குடும்பத்தாருக்கு ஏதாவது ஒன்றானால் எம்.எல்.ஏ பரமேஸ்வரிதான் காரணம்' என குற்றம்சாட்டுகிறார் ராஜேஷ்.

எம்.எல்.ஏ மகன்கள் மீது வழக்கு வம்பு தும்புகள் வரக்கூடாது என்பதற்காகதான் பைக் மோதி அடிபட்ட ராஜேஷ் வலுகட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று திருச்சி வட்டாரத்தில் கிசுகிசுக்கபடுகிறது.

எம்.எல்.ஏ.வாக உள்ளபோதே இத்தனை அலப்பறை என்றால், அமைச்சராக பதவியேற்றால்...!! வாய் பிளக்குறார்கள் மண்ணச்சநல்லூர் பொதுமக்கள்...!!!