Asianet News TamilAsianet News Tamil

"இது குட்கா அலுவலகம்" - டிஜிபி ஆபிஸ் முன் பேனர் வைத்தவர் கைது!

man who put banner in front of dgp office arrested
man who put banner in front of dgp office arrested
Author
First Published Jul 26, 2017, 12:13 PM IST


சென்னை, டிஜிபி அலுவலகத்தை குட்கா அலுவலகம் என குறிப்பிட்டு பேனர் வைத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளில் சில குட்கா நிறுவனங்களில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. 

சோதனையின்போது, தமிழகத்தில் விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி அளிக்க, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆவணங்கள் கிடைத்ததாக தகவல்கள் வெளியாகின.

man who put banner in front of dgp office arrested

பான், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்றும், தங்களின் குற்றமின்மையை  நிரூபித்த பிறகே அவர்கள் மீண்டும் பதவியில் அமர வேண்டும் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை, டிஜிபி அலுவலகம் முன்பு குட்கா அலுவலகம் என எழுதப்பட்ட பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி அலுவலகத்தை குட்கா அலுவலகம் என குறிப்பிட்டு பேனர் வைத்த மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன் என்பவரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.

செந்தில் முருகனை கைது செய்யும்போது, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டிஜிபி டி.கே. ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோஷமிட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios