man kills a woman with a knife What is the reason? Investigating Police ...
கரூர்
கரூரில் கத்தியால் பெண்ணை கழுத்தில் குத்திக் கொன்றவரை காவலாளர்கள் கைது செய்தனர். கொலைக்கான காரணத்தை காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
கரூர் மாவட்டம், தோகைமலையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (35). நாகராஜ் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனையடுத்து, விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், இவரது உறவினர் திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்த சின்னவழியன் (50) என்பவருடன் விஜயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாம்.
இந்த நிலையில், திருச்சியில் இருந்து, காவல்காரன்பட்டிக்கு வந்த சின்னவழியன் விஜயலட்சுமியிடம் திடிரென தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், கோபமடைந்த சின்னவழியன் விஜயலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.
விஜயலட்சுமியின் கழுத்தில் கத்தியால் குத்தியதால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை காவலாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விஜயலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து தப்பியோடிய சின்னவழியனை கைது செய்தனர். இப்போது அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகின்றனர்.
