இந்து முன்னணியினர் உள்ள பகுதியில் முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தா அணிந்து கொண்டு, ஓருவர் சுற்றி திரிந்தார். அவரை, பொதுமக்கள் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி பகுதி இந்து முன்னணியினர் அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு இன்று காலை முஸ்லீம் பெண்கள் அணியும் பர்தாவுடன் ஒருவர் சுற்றி வந்தார். நீண்ட நேரமாக அவர், அந்த பகுதியிலேயே இருப்பதுடன், அவரது நடை பாவனை சற்று வித்தியாசமாக இருந்தது.

உடனே அங்கிருந்தவர்கள், அவரை அழைத்தனர். ஆனால், பர்தா அணிந்து இருந்தவர், அங்கிருந்து தலை தெறிக்க ஓடினார். இதனால், அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரை விரட்டி சென்று மடக்கிபிடித்தபோது, அது பெண் அல்ல, ஆண் என தெரிந்தது. மேலும் அவர் முஸ்லீம் என தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு தர்மஅடி கொடுத்த இந்து முன்னணியினர், அவரை கவுந்தம்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஏற்கனவே இந்து முன்னணி பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்து முன்னணி பகுதியினர் வசிக்கும் பகுதியில் முஸ்லீம் வாலிபர், பர்தா அணிந்து சுற்றி திரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.